Home /   Categories /   Books  /   Kulisthaan Bosthaan (Bp)
  • Kulisthaan Bosthaan (Bp)
  • Kulisthaan Bosthaan (Bp)

Kulisthaan Bosthaan (Bp)

Per piece

Product details

Part No; 4487
Kg-0.145
Size: 180mm X 120mm

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரஸூலிஹில் கரீம் அன்புச் சகோதரர் மல்லவி M.M. பஹாவுத்தீன் ஆலிம் "காஸிமி" அவர்கள் எழுதிய "ஸஃதீயின் மலர்ச்சோலை" என்ற மொழியாக்க நூலைப் பார்வையிட்டேன். பார்ஸி மொழியில் பேரிலக்கியமாகத் திகழும் "குலிஸ்தான்" என்ற நூல் இமாம் "ஸஃதி" அவர்களால் இயற்றப்பட்டது. அந்த நூலில் 120 ஆக்கங்கள் உள மனித வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நல்வழியை அடிப்படையாகக் கொண்டு அந்த ஆக்கங்கள் உருவகம் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒவ்வொரு ஆக்கத்தையும் கருவாகக் கொண்டு ஒரு காவியமே படைக்கலாம்! அந்த அளவு ஆழமான தத்துவங்களை அவை உள்ளடக்கி இருப்பதால் பல மொழிகளில் அது ஆக்கம் செய்யப் பட்டுள்ளது. பல அறிஞர்கள் அதற்கு விரிவுரையும் தந்துள்ளார்கள். ஆனால் தமிழ் மொழியில் இதுகாறும் அதன் மொழியாக்கம் வெளிவராதது துரதிஷ்டம் என்றே கூற வேண்டும். அல்ஹம்து லில்லாஹ்! அந்தக் குறையை மவ்லவி அறிஞர் M.M. பஹாவுத்தீன் அவர்கள் போக்கிவிட்டார்கள்.


Similar products